
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் riverside என்ற ஊரில் வசிக்கும் அதிரையர்களான சஃபியுதீன், ரஃபீக் ஆகியோர் Fairfield ல் அமெரிக்கன் அதிரை போரம் அமைப்பு ஏற்பாடு செய்த இஃப்தார் விருந்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினர். போகிற வழியில் ஒரு எரிபொருள் நிரப்பும் மையத்தில் தங்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
அங்கு ஹெலிகாப்டரை தனது வாகனத்தின் பின்னால் கட்டி இழுத்து வந்திருக்கிறார் அமெரிக்கர் ஒருவர். அப்போது அதிரையர்களுக்கும் அந்த அமெரிக்கருக்கும் இடையே உரையாடல் துவங்கி இருக்கிறது.
தனது ஹெலிகாப்டரை டெக்சாசுக்கு டெலிவரி கொடுக்க போய் கொண்டிருப்பதாக அந்த அமெரிக்கர் தெரிவித்திருக்கிறார்.
பின்னர் தாங்கள் இருவரும் இஃப்தார் விருந்தில் பங்கேற்றுவிட்டு லாஸ் ஏஞ்சல்சுக்கு திரும்பி கொண்டிருப்பதாக அதிரையர்கள் கூறியுள்ளனர். அந்த சமயத்தில் இஃப்தார் என்றால் என்ன? இஸ்லாம் என்றால் என்ன ?நோன்பின் மாண்பு குறித்தும் அந்த அமெரிக்கருக்கு அதிரையர்கள் விளக்கியுள்ளனர்.
மேலும் தாங்கள் சஹருக்காக வைத்திருந்த உணவையும் அமெரிக்கருக்கு அதிரையர்கள் கொடுத்து வழி அனுப்பினர். அப்போது அந்த அமெரிக்கர் கண் கலங்கியது உண்மையின் இவை இறைவனின் ஏற்பாடு என்பதை நமக்கு உணர்த்தியது.
இறைவன் எப்படியெல்லாம் தான் நாடியவர்களுக்கு உணவளிப்பவன் என்பதையும்,இறைவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழியை கொடுப்பான் என்பதையும், அந்த அல்லாஹ்வுக்கே அதிகாரம் அனைத்தும் என உணர்ந்து இந்த சகோதரர்களும் விடை பெற்றனர்.