புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் வரும் 16-ம் தேதி பொறுப்பு ஏற்க உள்ளதாக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த 17 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா இருந்து வருகிறார்.
தற்போது அவர் தனது பொறுப்புகளை துணைத் தலைவராக இருந்து வரும் ராகுலுக்கு அளிக்க முன்வந்தார். இதனையடுத்து கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அலுவராக முல்லப்பள்ளி ராமசந்திரன் மற்றும் உறுப்பினர்களக மதுசூதனன் மிஸ்திரி , புவனேஸ்வர் காலிதா ஆகியோர் செயல்பட்டனர்.
தலைவர் பதவிக்கு ராகுலை தவிர வேறு யாரும் போட்டி மனுதாக்கல் செய்ய வில்லை. மேலும் இன்று டிச.,11 வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் என்பதால் அன்றைய தினமே அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து அறிவிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுலிடம் தலைவர் பதவி ஒப்படைப்பு
இதனையடுத்து தற்போதை தலைவர் சோனியா 16-ம் தேதி மூத்த தலைவர் கள் முன்னிலையில் தலைவர் பதவிக்கான சான்றிதழை ராகுலிடம் வழங்குவார் என கூறப்படுகிறது.
வரும் 18-ம் தேதி குஜராத் மாநில சட்ட சபை தேர்தல் முடிவு வெளியாக உள்ள நிலையில் ராகுல் தலைவராக 16-ம் தேதி பொறுப்பு ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.