53
அதிரை நடுத்தெரு, காலியார் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரே மின் மாற்றியிலிருந்தே மின் விநியோகம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மின் அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே புதிதாக மின் மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் அமைத்தனர். இந்த பணியை 11வது வார்டு கவுன்சிலர் இஸ்மாயில் நாச்சியா NKS சரீப் அவ்வப்போது பார்வையிட்டு பணியை விரைவு படுத்த அறிவுறுத்தினார். இந்நிலையில், அந்த மின் மாற்றி நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் நகராட்சி மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், எம்.எம்.எஸ்.அப்துல் கரீம், NKS சரீப், சுஹைப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.