Home » அதிரை நகராட்சியில் ஒப்பந்ததாரராகுவதற்கு ஓர் வாய்ப்பு! -முகம்மது மாகிர்

அதிரை நகராட்சியில் ஒப்பந்ததாரராகுவதற்கு ஓர் வாய்ப்பு! -முகம்மது மாகிர்

0 comment

அதிராம்பட்டினம் நகராட்சியில் வரிவசூல் உள்ளிட்ட பணிகளுக்கு ஏலம் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிரையில் உள்ள 16 குளம், குட்டைகளுக்கு மீன்பிடிப்பதற்கும், பேருந்து, லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கு வரி வசூல் செய்வதற்கும், நடைபாதை கடைகளில் வரி வசூல், அல்அமீன் பள்ளியை ஒட்டிய பேருந்து நிலைய புதிய கட்டண கழிவறைக்கான ஏலம், பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகைக்கான ஏலம் உள்ளிட்டவற்றிற்கு 26ம் தேதி ஏலம் விடப்படுகிறது.

இதில் 16 குளங்களுக்கு தலா 1000ம் , பேருந்து நிலைய கடைகளுக்கு 2 இலட்சமும், மற்றவற்றிற்கு 15,000ரூபாய் என டேவணித்தொகை (டெபாசிட்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அதிகாரம் என்பது வெறும் பதவிகளில் அமர்வது மட்டுமல்ல, நமக்கான நிதி ஆதாரத்தை அரசின் நிதி ஒதுக்கீடு, ஒப்பந்தங்களை அடைவதிலும் இருக்கிறது.

கடந்த இரண்டாண்டுகளாக நான் சொல்லிவருவது, முஸ்லிம்கள் அரசு ஒப்பந்ததாரராக பதிவு செய்யவும், ஒப்பந்தப்பணிகளை எடுக்கவும் முன்வரவேண்டும். குறிப்பாக, இஸ்லாமிய அரசியல் கட்சிகளில் பயணிப்பவர்கள் அதுபற்றிய விழிப்புணர்வோ, ஆர்வமோ இல்லாமல் இருக்கின்றனர். ஒருமுறை கூட அனுகாமல்/முயலாமல், அவர்கள் சொல்வது, அரசியல் சாக்கடை, இலஞ்சமில்லாமல் ஒப்பந்தங்களை எடுக்க முடியாது என்கின்றனர். அதில் ஓரளவு உண்மை இருக்கிறதுதான். அதற்காக சிறிதும் முயலாமல் இருப்பது சரியல்ல. நல்லெண்ணம் வைத்து முயற்சிக்க முன்வரவேண்டும்.

குறிப்பாக, ஜகாத் பணத்தில் ஒருவருக்கு தொழில் செய்ய உதவவேண்டும் என நினைப்பவர்கள் நேர்மையான ஒப்பந்ததாரராக ஒருவரை உருவாக்குவதற்கு இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வெறும் வைக்கோல் ஒப்பந்ததாரராக நுழைந்தவர்கள் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் ஒப்பந்ததாரராக வளர்ந்தவர்களின் கதைகள் நம்மூரிலும் உண்டு.

பேருந்துநிலைய கட்டண கழிவறை:
பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு அடிப்படை தேவையான கழிவறை வசதி இல்லை. பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நகராட்சி கட்டிடத்தில் சிறுநீர் கழிக்கின்றனர். இது தொடர்பாக, பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும், கட்டண கழிவறையை இலவசமாக்கவும் வேண்டி கடந்தாண்டு செயல் அலுவலருக்கு சிஎம் செல் மூலம் கோரிக்கை வைத்தேன். ஆனால் மழுப்பலாக பதிலளித்து நியாயமான இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தற்போது அல்அமீன் பள்ளியை ஒட்டி புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறைக்கு ஏப்ரல் 26? அன்று ஏலம் விடப்படுகிறது. இதற்கு டேவணித்தொகையாக 15,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter