அதிரை நகராட்சியில் பல இடங்களில் சாலை, கழிவுநீர் வடிகால் வசதிகள் இல்லை. இத்தகைய சூழலில் 50% முதல் 150% வரி உயர்வுக்கு தலைவர் MMS. தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் தலைமையிலான நகராட்சி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை திமுக கவுன்சிலர் ஆய்ஷா சித்திக்கா S.H.அஸ்லம், முஸ்லீம் லீக் கவுன்சிலர் பௌஜில் முபீன், SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.
இந்நிலையில், நகராட்சி ஆணையர் சசிகுமாரை நேரில் சந்தித்த அதிரை நகர தலைவர் அஸ்லம் தலைமையிலான நிர்வாகிகள், அதிரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதிய சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டினர். மேலும் வரி விதிப்புக்கான A,B,C மண்டலங்களை மறுபரிசீலனை செய்வதுடன் வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அதிரை நகர SDPI நிர்வாகிகள், அதிராம்பட்டினத்தை தாலுகாவாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்தி மனு அளித்தனர்.