16
அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடைப்பெற்றது. ஹோமம் செய்து மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து இந்த திருக்கல்யாணம் நடைப்பெற்றது.
திருவிழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு குங்குமம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.