53
அதிராம்பட்டினத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜியோவை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திடீரென இன்று காலை 10 மணி முதல் ஜியோ நெட்வொர்க் முழுமையாக முடங்கியுள்ளது. 5 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் ரீதியாக தொலைபேசி அழைப்பவர்கள், மற்ற அவசரகால அழைப்புகளுக்கு மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்கு ஜியோ நிறுவனம் இது வரை என்ன தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.