தமிழகத்திலேயே மிக பெரிய தாலுகாவாக இருக்கும் பட்டுக்கோட்டையை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, ஆண்டிக்காடு ஆகிய சரகங்களை கொண்டு அதிராம்பட்டினம் தாலுகா உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தங்கள் கிராமத்தை அதிராம்பட்டினம் தாலுகாவில் சேர்ப்பதற்கு அட்சேபனை இருக்கும் பட்சத்தில் அதனை பட்டுக்கோட்டை வட்டாட்சியர், கோட்டாட்சியர் அல்லது தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கேட்புக்கு பிறகு இறுதி முடிவுக்காக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். கடலோர மக்களின் கனவான அதிராம்பட்டினம் தாலுகா உருவாகும் பட்சத்தில் கடலோர பகுதிகளுக்கு அரசின் திட்டங்கள் விரைவாக கிடைப்பதுடன் பேரிடர் கால மீட்பு பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Big Breaking: அதிராம்பட்டினம் தாலுகா உருவாக்குவதற்கான பணிகள் துவக்கம்! கிராம மக்களிடம் கருத்து கேட்கும் அதிகாரிகள்!!
77
previous post