64
அதிரை நகராட்சி மன்றத்தின் புதிய அலுவலகம் கட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், எம்.எம்.எஸ்.அப்துல் கரீம் ஆகியோர் தலைமையில் ரிச்வே கார்டனில் நடைபெற்றது. இதில் அனைத்து முகல்லாஹ் கூட்டமைப்பு, அதிமுக, SDPI, மமக உள்ளிட்டவற்றில் தலைவர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன் வைத்தனர். அப்போது நகராட்சி அலுவலகத்திற்காக தனது இடத்தை விற்பனை செய்ய பி.எம்.கே. தாஜுதீன் முன்வந்தார். இதனையடுத்து சேது சாலையில் உள்ள அவரது இடத்தில் (ஈ.சி.ஆர் ரயில்வே கேட் அருகே) புதிய நகராட்சி மன்ற அலுவலகத்தை கட்ட கூட்டத்தில் முடிவு செய்தனர். இந்த கட்டடம் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.