47
அதிரை நெசவுத்தெரு நண்பர்கள் சார்பில் அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கான ஸஹர் விருந்து வழங்கப்பட்டது. மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விருந்துக்கு வந்திருந்த அனைவரையும் நெசவுத்தெரு நண்பர்கள் அன்போடு வரவேற்று உபசரித்து உணவு பரிமாறினர்.