Home » சவூதி அரேபியாவிலிருந்து இஸ்லாமியர்கள் ஜம்ஜம் நீரை கொண்டு வர அனுமதிக்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு PFI கோரிக்கை !

சவூதி அரேபியாவிலிருந்து இஸ்லாமியர்கள் ஜம்ஜம் நீரை கொண்டு வர அனுமதிக்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு PFI கோரிக்கை !

by
0 comment

கொரோனா நோய் தொற்றினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் கடமையான புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிபாடு செய்வதற்கு பிற நாட்டை சார்ந்தவர்கள் வருவதற்கு தடைவிதித்திருந்தது. தற்போது, இறை கடமைகளான உம்ரா மற்றும் ஹஜ் செய்வதற்கு பயணிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரமலான் மாதத்தை முன்னிட்டு மக்கா நகரில் முஸ்லிம்கள் உம்ரா பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இருந்தும் கணிசமான பயணிகள் உம்ரா என்ற புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். முஸ்லிம்கள் ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களை முடித்துவிட்டு திரும்பி வரும் பொழுது புனிதமாக கருதப்படும் ஜம்ஜம் தண்ணீரை தங்களுடைய குடும்பத்தாருக்கு கொண்டு வருவதும் அதனை சேமித்து வைப்பதும் வழக்கம்.

சவூதி அரேபிய அரசு 5 லிட்டர் வரை ஜம்ஜம் தண்ணீரை இலவசமாக ஹஜ் மற்றும் உம்ரா பயணிகளுக்கு வழங்குகிறது. இந்நடைமுறையை பின்பற்றி அனைத்து விமான நிறுவனங்களும் ஜம்ஜம் நீர் கொண்டு வருவதற்கு கடந்த காலங்களில் அனுமதி அளித்து வந்திருக்கிறது.

ஆனால், கொரோனா நோய் தொற்றிற்கு பிறகு சில விமான சேவைகள் தவிர்த்து பல விமான நிறுவனங்களும் இந்த ஜம்ஜம் தண்ணீர் கொண்டுவர அனுமதி மறுத்து வருதாக தகவல் வருகிறது. பலகாலமாக தொடரும் நடைமுறையை தடைவிதிப்பது என்பது கண்டனத்திற்குறியது.

முஸ்லிம்களின் பிரதான வழிபாட்டுடன் தொடர்புடைய ஜம்ஜம் என்ற புனித நீரை கொண்டு வருவதற்கு அனுமதி மறுப்பதன் மூலம் அவர்கள் பெரும் ஏமாற்றமடைவார்கள். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும் போது, அங்கு கிடைக்கக்கூடிய சிறப்புக்குரிய பொருட்களை கொண்டு வருவது என்பது எல்லா சமயங்களில் உள்ள வழக்கமான நடைமுறை ஆகும்.

எனவே, இந்த விவகாரத்தில் இருநாட்டு வெளியுறவு அமைச்சக அரசுகளும் தலையிட்டு சம்மந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், இதில் உள்ள தவறான புரிந்துணர்வுகளை கலைந்து, ஜம்ஜம் நீர் கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழக அரசும் இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter