தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அபுபக்கர் தேசிய அளவிலான போட்டியில் கோல் அடித்துள்ளார்.
17வது இளையோருக்கான தேசிய கால்பந்து போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் பங்குபெற்றுள்ளன. தமிழகம் சார்பாக அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்த AFFA அணியின் ஜூனியர் வீரரும்,அப்பாதுரை ஜமால் அவர்களுடைய மகன் அபுபக்கரும் இடம்பிடித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற உத்தரபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் அபுபக்கர் தமிழக அணிக்காக கோல் அடித்து அசத்தினார்.இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் தமிழகம் வெற்றி பெற்றது.