தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசணைக் கூட்டம் 10/12/2017 சனிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் நகர அலுவலகத்தில் நகர செயலாளர் செல்லராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் குவைத் மண்டல து. செயலாளர் பைசல் அஹமது அவர்கள் முன்னிலையில் அஹமது அவர்கள் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
அதனை தொடர்ந்து நகர நிர்வாகம் கட்டமைப்பு, அனைத்து வார்டுகளிலும் கிளைகள் அமைப்பது, மாற்றுமத நண்பர்களை கட்சியில் இணைப்பது, போன்றவை விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக மருத்துவ அணி செயலாளர் சமீர் அவர்கள் நன்றியுரை கூறி கூட்டம் நிறைவுற்றது.