அதிரை எக்ஸ்பிரஸ்:-SDPI கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை உடனே கண்டுபிடிக்கவும்,பலியான மீனவர்களுக்கு 20லட்சம், காயமுற்றவர்களுக்கு 10லட்சம் உடனடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும்,கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரியும்,ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 12.12.2017 அன்று மாலை 4 மணிக்கு,விருந்தினர் மாளிகை அருகில்,சேப்பாக்கத்தில் SDPI கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
SDPI கட்சியின் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாக்கவி தலைமையில் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்,கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன்,கிறிஸ்துவ நல்லிணக்கம் அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜ்,மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் இரா.அன்பழகனார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கண்டண உரையாற்ற இருக்கிறார்கள்.