திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வழங்கலில் கடந்த இரண்டு மாதங்களாக பிரச்சனை நீடித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் முத்துப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் முறையாக குழாய்களில் நீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை.
இதுகுறித்து SDPI மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை
05, 08, 12, 14 மற்றும் 15 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் SDPI கட்சியின் மன்ற உறுப்பினர்கள் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக ADSP திரு.வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் குடிநீர் வழங்கலை சமாளிக்க திட்டமிடுவதை விடுத்து, ‘மேலிடத்தில் கேட்டுச் சொல்வதாக’ மன்றத் தலைமை பொறுப்பற்ற பதிலை சொல்லிக் கொண்டிருக்கிறது என்றும் இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆர்பாட்டகாரர்கள் கோஷமிட்டனர்.
இதனிடையே அதிகாரிகளிடம் காவல் உயரதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் விரைவாக இப்பிரச்சினை தீர நிரந்தர நடவடிக்கைகள மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
