அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான பெரிய கடை தெருவில் தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன்,காய்க்னி,மாமிச கடைகள் அதிகளவில் இயங்கி வருகின்றது
வக்பு நிலமான அவ்விடத்தில் சேரும் குப்பைகளை அகற்ற நகராட்சிக்கு தக்வா பள்ளி நிர்வாகம் மாதாந்திர வரியை தனியாக செலுத்தி வந்தன.
ஆனால் அன்றாடம் சேகாரமாகும் குப்பைகளை அகற்றிய நிர்வாகம், கோழி,ஆட்டு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவில்லை
என கூறப்படுகிறது.
இதனால் சுற்றி திரியும் தெரு நாய்களும் பறவைகளும் குப்பையை கிளறி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியாகவும்,வணக்க ஸ்தலங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இப்பகுதியைக் கடக்கும் ஒவ்வொருவரும் மூக்கை பிடித்து நடக்க நேரிடுகிறது.
நகராட்சி நிர்வாகம் ஆடு,கோழி கழிவுகளை தினமும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,பேரூராட்சி நிர்வாகமாக இருந்த கட்டத்தில் சிறப்பாக குப்பைகளை அகற்றினார்கள் என்றும், நகராட்சி நிர்வாகமோ மெத்தனம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?