திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் புதிதாகப் பள்ளிவாசல் கட்டியுள்ளனர். இந்நிலையில் குடியிருப்புக்கு அனுமதி பெற்றுவிட்டுப் பள்ளிவாசல் கட்டியுள்ளதாகக் கூறி ஏற்கெனவே வழங்கிய அனுமதியைப் பேரூராட்சி செயல் அலுவலர் ரத்து செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலை இடிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மேல்முறையீடு செய்தனர்.
இந்த முறையீட்டை விசாரித்த நீதிபதி, விசாரணையை 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்ததுடன், முதலில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் அலுவலர்கள் பள்ளிவாசலின் கதவுகளைப் பூட்டி சீல் வைத்தனர். இதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்புக்காகக் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
முத்துப்பேட்டையில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்குப் பேரூராட்சி அதிகாரிகள் சீல்வைத்தனர்.
More like this
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
Elementor #88400
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5's மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர்...