இறைவன் படைத்துள்ள கோடிக்கனக்கான உயிரினங்களில் மனிதர்கள் என்ற உயிரினமும் ஒன்று மனிதனின் படைப்பை இறைவன் அல்குர்ஆனில் குறிப்பிடும் போது ஆண் பெண் என்ற இரு இனங்களை படைத்திருப்பதாகவே சொல்லப்படுகிறது
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள் அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான் பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான் ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள் அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள் மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்
மனிதனின் உடலியலில் சிலர்களுக்கு ஏற்படும் மரபணுக்கோளாறுகளால் சிலருக்கு பிறக்கும் குழந்தைகள் விந்தையாகவும் வித்தியாசமாகவும் பிறக்கின்றது நான்கு கை உடைய குழந்தைகள் மூன்று கால்கள் உடைய குழந்தைகள் இப்படி பல வகைகள்
அதில் ஒரு சாரார் தான் அரவாணிகள் என்று சொல்லப் படுகின்ற மனித இனத்தவர்கள்
இவர்கள் தங்களை ஆண் பெண் அல்லாத மூன்றாம் பாலினம் என்று தங்களை அறிமுகம் செய்தாலும் இவர்கள் இரு பாலினத்தை சார்ந்தவர்கள் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்
அதனால் தான் நபி ( ஸல் ) அவர்கள் ஒரு ஆணுக்கு எது போன்ற சட்டங்களை சொன்னார்களோ அதே சட்டங்களை அரவாணிகளுக்கும் கூறியுள்ளனர்
என்னிடம் (பெண்னைப் போன்று நடந்து கொள்ளும்) “அரவாணி ஒருவர் அமர்ந்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள் அந்த அரவாணி, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், “அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள்
ஏனென்றால் அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள் என்று சொல்வதை நான் செவியுற்றேன்
(இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அரவாணிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது என்று சொன்னார்கள்
அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) நூல் : புகாரி (4324)
அரவாணிகள் என்று பொதுவாக நாம் கூறினாலும் அவற்றை இரண்டு பெரும் பிரிவுகளில் பிரிக்கலாம்
1— Transgender (ட்ரான்ஸ் ஜெண்டர்)
2— Intersex (இன்டர்செக்ஸ்)
ட்ரான்ஸ் ஜெண்டர் என்றால் யார் ?
இவர்கள் பிறப்பால் ஆண் அல்லது பெண்ணாக பிறக்கிறார்கள் முழுமையாக ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பார்கள்
இவர்களில் ஆண்களால் பெண்ணை கற்பமாக்க இயலும் அந்தப் பெண்ணால் கருவுறவும் இயலும் ஆனால் இவர்கள் வளரும்போது இவர்களது பாலினம் தவறாக வந்ததாக மனதளவில் உணர்வார்கள்
அவர்களில் பெண்கள் தனது ஆத்மா பெண்ணாகவும் ஆனால் தனது உடல் அமைப்பு ஆணின் தோற்றத்தில் இருப்பதாகவும் உணர்வார்கள்
அவர்களில் ஆண்கள் தங்களை பெண்களாக உணர்வார்கள்
இரு சாராரரும் அவர்களுக்கு இருக்கின்ற மறைவான உருப்பை வெறுப்பார்கள்
இது ஒரு மனநிலை கோளாறு மட்டுமல்ல மனநிலை கோளறுடன் கூடிய உடலியல் கோளாறும் ஆகும்
இவர்களில் (ஆண்களின்) நரம்பு மண்டலம் பெண்களின் நரம்பு மண்டலம் ஆகும்
மூளையின் ஒரு பகுதி பெண்களின் மூளை ஆகும்
தேவையான கவுன்சிலிங் கொடுத்து சரியாக்க முயற்சிக்கலாம் நரம்புமண்டல குறைபாடு எனில் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்
ஆனால் இது போன்ற எந்த அறிவியல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளுக்கும் அவர்கள் முன்வருவதில்லை மூளை குறைபாடு என்பதை நாம் “லூசு” “மெண்டல்” என்கிறோம்
அதே போன்ற குறைபாடு உள்ள இவர்களை மட்டும்ஆண் பெண் அல்லாத மூன்றாம் பாலினம் என்று அறிவிப்பது எவ்வாறு சரியாகும் என்று சிந்திப்பது இல்லை
2 ★ Intersex (இன்டர்செக்ஸ்) என்றால் யார் ?
இவர்கள் பிறவிக்குறைபட்டால் ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இல்லாத ஒரு நிலையில் பிறந்து விடுகிறார்கள்
ஆண் உறுப்பு மிக மிக சிறியதாகவோ அல்லது பெண் உறுப்பின் கிளிடோரிஸ் பெரிதாகி ஆண் உறுப்பு போலவோ இருக்கலாம்
இந்த குறை பிறவியிலேயே தெரியலாம் அல்லது இந்த குறைகள் எதுவும் இல்லாமல் அழகிய வடிவில் பிறக்கலாம்
பின்னர் வளரும்போது வயதுக்கு வராமலோ கருத்தரிக்க இயலாமலோ ஆண்மை குறை பாட்டுடனோ இருக்கலாம்
இந்த குறைபாடு சிறுவயதிலேயே தெரிந்தால் இவர்கள் அடையாளம் காணப்பட்டு 9 என்ற நடைமுறை சொல்லை கொண்டு முத்திரை குத்தபடுவார்கள்
இவர்கள் நாம் மேலே கூறியதைப் போல் ட்ரான்ஸ் ஜெண்டர் போல் மனமாற்றம் கொண்டவர்களாக இருப்பதில்லை
ஆனால் சமுதாயத்தின் புறக்கணிப்பின் காரணமாகவும் அவர்களின் ஒழுக்கமற்ற நடவடிக்கை காரணமாகவும் அந்த நிலைக்கு தள்ள படுகிறார்கள்
ஆனால் இவர்களுக்கு மருத்துவ நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது இவர்களின் பிறவி குறைபாட்டை சில அறுவை சிகிச்சை மூலம் சரிபடுதலாம் பெண் உருப்பை போலுள்ள பெரிய கிளிட்டோரிசை சிறியதாகலாம்
ஆனால் சிறிய ஆண் உறுப்பை நவீன மருத்துவத்தாலும் பெரிதாக மாற்ற இயலாது
கருப்பை இல்லாமல் பிறந்தால் ஒன்றும் செய்ய இயலாது
இவர்களுக்கு ஆண் உறுப்பு இருந்து விரைப்பைகள் இல்லாமல் இருந்தால் இல்லறம் கொள்ளலாம் ஆனால் குழந்தை பிறக்காது மொத்தத்தில் இவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் பிறந்தால் எவ்வித மாற்றத்தையும் அறிவியல் துணை கொண்டு செய்ய இயலாது
முழுமையான ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள குழந்தை பேறின்மையை கூட மருத்துவத்தால் குனப்படுத்த இயலாதபோது அதையே முக்கிய குறைபாடாக கொண்ட இவர்களுக்கு மருத்துவம் ஒன்றும் செய்ய இயலாது
சிறிய ஆண் குறி உள்ளவர்களுக்கு அறுவை சிகிட்சை மூலம் பெண் உறுப்பு ஏற்படுத்தலாம்
சில ஹார்மோன் சிகிச்சையும் செய்யலாம் இவைகள் மூலம் பெரிய மாற்றம் நிகழா விட்டலும் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை இதன் மூலம் வர வைக்க முடியும்
அரவாணிகள் செய்ய வேண்டிய அறிவியல் மருத்துவம் சம்மந்தப்பட்ட அரவாணிகளின் உடற்கூறு முழுமையாக ஆணாக மாறும் வாய்ப்புள்ளது என்று மருத்துவம் கூறினால் அவர்கள் ஆண்களாக அறுவை சிகிச்சை செய்வதையும் சம்மந்தப் பட்டவர்களின் உடற்கூறு முழுமையாக பெண்ணாக மாறும் வாய்ப்புள்ளது என்று மருத்துவம் கூறினால் அவர்கள் பெண்களாக அறுவை சிகிச்சை செய்வதையும் தான் இஸ்லாம் அனுமதிக்கின்றது
காரணம நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள்
மேலும் அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொன்னார்கள் அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள் உமர் (ரலி) அவர்களும் ஒருவரை வெளியேற்றினார்கள்
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி) நூல் : புகாரி (5886)
இறுதியாக நாம் சொல்வது மூன்றாம் பாலினம் இல்லை என்றாலும் இந்த இரண்டு வகை குறைபாடு உள்ளவர்களையும் சேர்த்துதான் சமுதாயம் இயங்குகிறது
அவர்கள் தனியாக போராடவும், பிச்சை எடுக்கவும், விபச்சாரம் செய்யவும் சமுதாயமே காரணம் அவர்களுக்கு தேவையான சிகிட்சையோ ஆலோசனையோ வழங்குவது சமுதாயத்தின் கடமை இது போன்றவர்களின் இழிநிலை நீங்குவதற்கு இஸ்லாத்தை ஏற்பதும் மருத்துவ ஆலோசனைகளுக்கு அவர்கள் தங்களை தயார் படுத்துவதும் தான் தீர்வாகும்
நட்புடன் J .இம்தாதி