அதிராம்பட்டினம் ECR சாலையில் .இரு சக்கர வாகனத்தின் மீது அறுந்து விழுந்த மின் கம்பியால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி அலுவலகம் எதிரே செல்லும் மின் கம்பிகள் அனைத்தும் தாழ்வாக செல்கிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் தாழ்வாக சென்ற மின் கம்பி ஒன்று திடீரென அறுந்து விழுந்துள்ளது.
அப்பொழுது அவ்வழியாக சென்ற இரு சக்கரம் வாகனத்தின் மீது விழுந்துள்ளது இதனால் பதற்றமடைந்த வாகன ஓட்டி பைக்கை விட்டு விட்டு தப்பியோடியானர்.
இதனால் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டது.
அவ்வ்போது அறுந்து விழும் மின் கம்பியால்,மக்கள் அச்சமுடன் கடக்க வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் அளிக்கின்றனர்.
