Home » ஆனைவிழுந்தான் குளக்கரையில் பசுமை புரட்சி !

ஆனைவிழுந்தான் குளக்கரையில் பசுமை புரட்சி !

by
0 comment

அதிராம்பட்டினம் 13வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான ஆனை விழுந்தான் குளக்கரையில் பொருப்பற்ற சில பொதுமக்களால் குப்பைகளை கொட்டி நாசம்.செய்யப்பட்டு வந்தன.

இதனால் அப்பகுதியே துர்நாற்றம் வீசி சுற்று சூழலுக்கு சவால் விட்டு கொண்டிருந்தது.

நீர்நிலைகளை பாதுகாக்க அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

அதன் படி பழமைவாய்ந்த இந்த நீர்நிலைகளை தூய்மையாக பாதுகாக்க பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க அதிராம்பட்டினம் நகராட்சி குப்பை கொட்டும் கிடங்கு நிரம்பி வழியும் இத்தருனத்தில் ஆனை விழுந்தான் குள குப்பைகளை அகற்ற
அப்பகுதி மக்கள் கவுன்சிலரான பெனாசிரா அஜாருதீனுக்கு கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை குறித்து நகராட்சி நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற பெனாசிரா அஜாருதீன் தமது வார்டுக்குட்பட்ட ஆனை விழுந்தான் குளத்து மேட்டில் கொட்டப்பட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளை கேட்டு கொண்டார்.

இந்த குப்பையை அள்ளி எங்கே கொட்டுவது என கையை பிசைந்த நகராட்சி துணை தலைவர் JCB இயந்திரத்தை வரவழைத்து லாவகமாக குளத்தில் குப்பைகளை தள்ளி குளக்கரையை சுத்தப்படுத்தியுள்ளார்.

நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே நீர் நிலைகளை அழிக்க முயர்சித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சம்மந்தப்பட்ட இடத்தில் இனியும் குப்பை கொட்ட கூடாது என மாற்றி யோசித்த SDPI கட்சியின் கவுன்சிலர் அப்பகுதியை பசுமை வழியாக மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறார்.

அதன் முதல்படியாக குளத்தை சுற்றிலும் பூமர செடிகளை வைத்து பராமரிப்பது என்றும், தானியங்கி கண்காணிப்பு கேமரா பொருத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க போதுமான நடவடிக்கைகளை நகராட்சி உதவியுடன் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter