முன்னாள் அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளரும், பதவி உயர்வு பெற்று தற்போது பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றும் திரு செங்கமலக் கண்ணன் DSP, M.A அவர்கள் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு வருகின்ற 02-06-2022 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பட்டுக்கோட்டை சிவக்கொல்லை TS வசந்தம் மஹாலில் நடைபெறும் சிறப்பு விழாவில் அதிராம்பட்டினம் நகர பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டு கொள்கிறார்.
அதிரையின் சொந்தங்கள் அனைவருக்கும் நேரடியாக எனது கரங்களால் அழைப்பிதழை வழங்க நினைத்தாலும் பணிச்சுமையின் காரணமாக நேரில் வந்து தர இயலவில்லை ஆதலால் தான் அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் வாயிலாக தங்களின் பார்வைக்கு அழைப்பிதழை சமர்பிக்கிறேன்.
இதனையே எனது நேரடி அழைப்பாக ஏற்று மேற்குறிப்பிட்ட தேதியில் தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்திட அன்போடு அழைப்பதாக தெரிவித்துள்ளார்.