Home » பொதுமன்னிப்பில் விடுதலை செய் – தமிழக சட்டமன்றம் முற்றுகை – அனல் தெறிக்கும் அதிரை சுவர் விளம்பரம் !

பொதுமன்னிப்பில் விடுதலை செய் – தமிழக சட்டமன்றம் முற்றுகை – அனல் தெறிக்கும் அதிரை சுவர் விளம்பரம் !

by
0 comment

மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் சிறைவாசிகள் விடுதலை கோரி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

மஜகவின் தலைவரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரியின் வழிகாட்டுதலின் படி வரவிருக்கும் செப்டம்பர் 10ஆம் தேதியன்று தமிழக தலைமை செயலக முற்றுகை போராட்டத்தை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும், இப்போராட்டம் குறித்த சுவர் விளம்பரமாக செய்து வருகிறார்கள்.

அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களில் இவ்விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மஜக அனுதாபி ஒருவர் கூறுகையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நோக்கில் பார்க்காமல் சிறையில் இருப்பவர் இஸ்லாமியர் என்பதால் அரசு பாராமுகம் காட்டுகிறது என்றார் இதனை அரசுக்கும் ஆளும் அதிகார வர்க்கத்திற்கும் தெரிவிக்கும் நோக்கில் நடக்கவிருக்கும் இப் போராட்டத்திற்கும் இப்போராட்டதில் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter