Home » பாஜக கருப்பு முருகானந்தத்தின் சொத்துக்களை முடக்க தயாரா? அமலாக்கத்துறைக்கு அபூபக்கர் சித்திக் சவால்!!

பாஜக கருப்பு முருகானந்தத்தின் சொத்துக்களை முடக்க தயாரா? அமலாக்கத்துறைக்கு அபூபக்கர் சித்திக் சவால்!!

by அதிரை இடி
0 comment

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கி கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையை கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுபேசிய அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் அதிரை ஹாஜா அலாவுதீன், தங்களை காக்க யாரும் வர போவதில்லை, தாங்களே வீதிக்கு வந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என மக்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் கூறுவதாக தெரிவித்தார். மேலும் வங்கி கணக்குகளை முடக்கினாலும் பாப்புலர் ஃப்ரண்ட் பணியை முடக்கிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய  SDPI மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், இந்தியாவிலேயே ராணுவம், ரயில்வேக்கு அடுத்து அதிக நிலங்களை கொண்ட அமைப்பு வக்ப் வாரியம் என்றார். மேலும் ஆர்.எஸ்.எஸ் அடித்தால் திருப்பிஅடி என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுத்தது பாப்புலர் ஃப்ரண்ட் என சுட்டிக் காட்டிய அவர், பாஜக-வின் கருப்பு முருகானந்தம் வைத்திருக்கும் கோடி கோடியான கருப்பு பணத்தை அமலாக்கத்துறை சோதனையிட தயாரா? என அந்த துறைக்கு சவால்விடுத்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter