Home » மந்திரிப்பட்டிணம் பள்ளிவாசல் திறப்பு – சமூக நல்லிணக்க விழா !

மந்திரிப்பட்டிணம் பள்ளிவாசல் திறப்பு – சமூக நல்லிணக்க விழா !

by
0 comment

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா   மந்திரிப்பட்டிணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முஹைதீன் மஸ்ஜிதுல் அமீன் ஜூம்ஆ பள்ளிவாசல் என்ற பதிய பள்ளிவாசல்  திறப்பு விழா ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவிற்கு மலேசிய தொழிலதிபரும் டத்தோ அப்துல் அஜீஸ் பின் அப்துல் ரஜாக் தலைமை வகித்தார், பின்னர் அதிராம்பட்டினம் ரஹ்மானியா அரபிக்கல்லூரி முதல்வர் KT முகம்மது குட்டி ஹஜரத் முகம்மது நெய்னா. அத்ரமி, MY ஹிமாயுன் கபீர் உஸ்மானி ஆகியோரன் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

முன்னதாக இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக பெண்களுக்கான பயான் நேற்று நடந்தது, இதில் ஃபாத்திமா சபரிமாலா,ஃபர்வீன் சுல்தானா கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். சுமார் 5000 பெண்கள் கலந்து கொண்ட பெண்களுக்கான நிகழ்வில் ஃபாத்திமா சபரிமாலா பேசுகையில், பள்ளி பிரமாண்டமான முறையில் கட்டி விடுகிறறோம்,ஆனால் அதில் ஊழியம் செய்யும் இமாம் முஅத்தின் ஆகியோர் மிகவும் பிந்தஙகிய நிலையில் இருப்பதை காண முடிகிறது.

இதனை தவிரக்க போதுமான வருமானங்களை பள்ளியின் மூலமாக வக்பு நிலஙகளை கொண்டு ஈட்ட வேண்டும் என்றார்.

இந்த திறப்பு விழாவில் அப்பகுதி கிராம இந்துக்கள்,கிருஸ்த்தவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் குறிப்பாக இப்பள்ளியின் கட்டுமான பணிக்கு ஏராளமான பொருளாதார உதவிகளை அப்பகுதி இந்து மக்கள் வழஙகியுள்ளார்கள்.

திறப்பு விழாவான இன்று போட்டி போட்டுக் கொண்டு திறப்பு விழா பணிகளை போட்டி போட்டுக் கொண்டு கிராம இந்துக்கள் செய்தது வெளியூர்களில் இருந்து வந்த இஸ்லாமியர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இந்த பள்ளிவாசல் திறப்பு வுழாவில் அதிரையில் இருந்து நூற்று கணக்க்கானோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter