95
அதிராம்பட்டினம் வீரனார் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சியில் பிள்ளைமார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரனார் கோயில் கும்பாபிஷேகம் இன்று அதி விமரிசையாக நடைபெற்றது முன்னதாக கடந்த புதன்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சரியாக 10 மணி அளவில் வீரனார் கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் அதிராம்பட்டினம் மற்றும் இதைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து சுவாமியை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பிள்ளைமார் தெரு மக்கள் செய்திருந்தனர்.