அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் கார்த்திக் பிரதர்ஸ் காரைக்குடி – அத்லெடிக் புல்ஸ் தஞ்சாவூர் ஆகிய அணிகள் மோதின.
விறுவிறுப்புடன் தொடங்கிய இந்த போட்டியில் தஞ்சாவூர் அணி தனது நேர்த்தியான ஆட்டத்தினால் தனது முதல் கோலை அடித்து முன்னிலை பெற்ற சில நிமிடங்களிலேயே காரைக்குடி அணியும் முதல் கோலை அடித்து தஞ்சை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.
முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல்களை அடித்து சமநிலையில் இருந்தனர்.
இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்ட தஞ்சாவூர் அணி சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி இறுதி வரை ஆட்டத்தினை தனது வசமாக்கி மேலும் ஒரு கோல் அடித்து 2 – 1 என்கிற கோல் கணக்கில் காரைக்குடியை வீழ்த்தியது.
நாளைய தினம் பலம் வாய்ந்த கௌதியா 7’s நாகூர் அணியுடன் திண்டுக்கல் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
