அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள செங்கபடத்தான்காட்டை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுக்கு மலேசியாவில் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சீனு என்பவர் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு அனுப்பியுள்ளார். இவரை மலேசியாவில் உள்ள வசந்தா என்பவர் அவருக்கு தெரியாமல் சீன பெண் ஒருவரிடம் விலைக்கு விற்றுள்ளார். இதையடுத்து அந்த இளம் பெண் சீன பெண்ணால் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு துண்புறுத்தப்பட்டுள்ளார்.
இதற்கு உடன்படாத லெட்சுமி, அக்கும்பலிடமிருந்து தப்பித்து எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு, தான் ஆபத்தில் சிக்கி இருப்பதை எடுத்துக்கூறி தனக்கு உதவும்படி கோரி இருக்கிறார்.
இந்நிலையில், மலேசியாவில் ஆபத்தில் சிக்கிய பானுப்பிரியாவை பத்திரமாக இந்தியா கொண்டு வரும் முயற்சியாக, எஸ்டிபிஐ கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் நிஜாமுதீன், நேஷனல் விமன் ஃப்ரண்ட் அமைப்பின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சபியா நிஜாமுதீன், எஸ்டிபிஐ தஞ்சை மாநகர தலைவர் இக்பால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அதிரை அப்துல் ரஹ்மான், அதிராம்பட்டினம் நகர தலைவர் அசாருதீன் லெட்சுமி தாயார் பங்கஜவல்லி, உறவினர் கோவிந்தசாமி மற்றும் லெட்சுமி குழந்தை ஹர்னிகா ஆகியோரை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை நேற்று சந்தித்து, மலேசியாவில் ஆபத்தில் சிக்கிய தமிழகப் பெண் பானுப்பிரியாவை பத்திரமாக இந்தியா கொண்டுவருவதற்கான
உதவியை அளிக்கக் கோரி மனு அளித்தனர்.