அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடர் போட்டியின் நான்காம் நாளான இன்று திருச்சி – புதுக்கோட்டை அணிகள் மோதின.
இளம் திறமை வாய்ந்த வீரர்களை உள்ளடக்கிய திருச்சி அணி, முதல் பகுதி நேர ஆட்டம் முடிவதற்குள்ளாகவே புதுவித உத்வேகத்துடன் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து புதுக்கோட்டை அணியை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் புதுக்கோட்டை அணி ஓரளவு சுதாரித்து தனது முதல் கோலை அடித்தபோதிலும் போதிய அளவிற்கு அவர்களுடைய ஆட்டம் கைகொடுக்கவில்லை.
ஒற்றைப்படையில் தனது கோல் கணக்கை நிறுத்த விருப்பமில்லாமல் மீண்டும் ஒரு கோலை அடித்து திருச்சி அணி 4 – 1 என்கிற கோல் கணக்கில் புதுக்கோட்டையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நாளைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் காரைக்குடி – மதுரை அணிகளும், இரண்டாவது போட்டியில் அணிகளும் மோதுகின்றனர்.
