
துலுக்காப்பள்ளி டிரஸ்ட்டின் கீழ் புனரமைக்கப்பட்ட மஸ்ஜித் தக்வா பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழக வக்பு வாரிய கட்டுப்பாட்டில் இயங்க கூடிய இப்பள்ளிக்கு என அசையா சொத்துக்கள் ஏராளமாக இருக்கிறது.
பள்ளியை நிர்வகித்த முன்னாள் நிர்வாகிகள் சிலரின் கவன குறைவு காரணமாக தனியார்கள் பலர் நிலத்தை அபகரித்து போலியான ஆவணங்கள் மூலம் வேறு நபர்களுக்கு கிரயம்.செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியின் நிர்வாகம் சார்பில் நிலங்களை கையகப்படுத்த தொடுத்த வழக்கில் பள்ளிக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.
அந்த தீர்ப்பின் சாராம்சம் கல்வெட்டாக தக்வா பள்ளியின் அகலுக்கு அருகாமையில் இன்றளவும் இருக்கிறது.
இந்த நிலையில் மீட்கப்பட்ட நிலங்களில் கடை வைத்திக்கும் சிலர் சொந்த நிலமாக கருதி வாடகை செலுத்த தவறி வருகின்றனர், சிலர் பள்ளி நிர்ணயித்த வாடகைக்கு உட்படாமல் அந்த கால வாடகையை மாத்திரமே செலுத்த தயாராக உள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டு வக்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு வாடகை நிலுவையை செலுத்தவும், அல்லது செலுத்தாததின் காரணத்தை எழுத்துபூர்வமாக வக்பு வாரிய தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் இன்று வாடகை தாரர்களுக்கு வக்பு வாரிய தஞ்சை சரக ஆய்வாளர் மூலமாக கொடுக்கப்பட்டது.
சிலர் கையொப்பமிட்டு அந்த நோட்டிசை பெற்றனர் சிலர் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர்கள் நோட்டிசை வாங்க மறுத்ததால் கடையின் முன்புறம் நோட்டிஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வக்பு வாரிய தஞ்சை சரக ஆய்வாளர் கூறுகையில், அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் கடை வைத்திருப்போர் வக்பு நில சட்டம் அளவு கோலில் வாடகையை செலுத்த முன் வர வேண்டும் என்றும், அப்படி செலுத்த தவறியவர்கள் அதற்கான காரணத்த் வக்பு வாரிய தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும்.என்றார்.
மேலும் வக்பு நிலத்தை சொந்த்மாக பாவிக்கும் சிலர் அதற்கான அசல் தஸ்தாவேஜ்களை வக்பு வாரிய அதிகாரிகளிடத்தில் சமர்பித்து ஊர்ஜிதபடுத்தி கொள்ளலாம் என்றார்.இது தவிர தக்வா பள்ளியின் வக்பு நிலங்கள் 100 சதவீதம் யாருக்கும் உரிமை கோர வாய்ப்பு இருக்காது என்றார்.