61
அதிரையர்களுக்கு கல்வி அறிவை வழங்குவதில் MKN மதரஸா டிரஸ்ட் தவிர்க்க முடியாத பங்களிப்பை அளித்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தடிரஸ்ட்டின் கீழ் இயங்க கூடிய காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து 96 மாணவிகள் தேர்வுஎழுதியிருந்தனர். இதில் அத்தனை பேருமே தேர்ச்சி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். மாணவிகளை 100% தேர்ச்சிபெற செய்த தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்கள், பள்ளிபணியாளர்கள் ஆகியோருக்கு பெற்றோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.