Home »  பட்டுக்கோட்டையில் இலவச தாய்சேய் வாகனம்!!!

 பட்டுக்கோட்டையில் இலவச தாய்சேய் வாகனம்!!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- தேசிய நல்வாழ்வு திட்டம்- தமிழ்நாடு சுகாதர திட்டம் – இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் மூலம் இலவச தாய், சேய் வாகனம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட கிளைக்கு கூடுதலாக TN32 G 0411 என்ற வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சேவை மூலம் அரசு தாய் சேய் மருத்துவமனையில் பிரசிவித்த தாய் மற்றும் குழந்தைகள் அதன் பின்னர் ஒருவருடத்திற்கு தடுப்பூசிக்காகவும் மற்றும் குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து அவர்களது இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுகிறது. இதற்காக எந்தவித கட்டணமும் வழங்கவேண்டியதில்லை. இது முற்றிலும் இலவச சேவையாகும்.

இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தவர் பட்டுக்கோட்டை தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர் திருமதி தி.ராணி,கலந்துகொண்டவர்கள் மருத்துவர் M.எட்வின்,மாவட்ட தொற்றா நோய் ஒருங்கிணைப்பாளர்,இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ,தஞ்சாவூர் மாவட்ட கிளை சேர்மன் இராஜமாணிக்கம்,செயலாளர் U.ஜோசப்,பட்டுக்கோட்டை ரெட்கிராஸ் கிளை சேர்மன் சுவாமிநாதன்,அதிராம்பட்டினம் ரெட்கிராஸ் கிளை சேர்மன் மரைக்கா K.இத்ரீஸ் அகமது,பட்டுக்கோட்டை ஜேஆர்சி கன்வீனர் பிச்சை மணி,மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் வாழ்நாள் உறுப்பினர்களும்,பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
தொலைபேசி எண்:-8220950907
இலவச தொலைபேசி எண்:-102 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter