82
அதிரையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
வெயிலின் உக்கிரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அதிரையர்களுக்கு இதமூட்டும் விதமாக இன்று மாலை கரு மேகங்கள் சூழ மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் பெய்த இந்த மழையால் அதிரையில் ஓரளவிற்கு வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி, தற்போது சாரல் மழை பெய்து வருகிறது.
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.