தேசிய தவ்ஹீத் கட்டமைப்பு சார்பாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வருகின்ற ஹஜ்ஜு பெருநாள் அன்று நபி வழி திடல் தொழுகை நடத்திட மாநில தலைமையகம் அறிவுறுத்தி இருந்தது.
அதன் பேரில் அதிராம்பட்டினம் NTF கிளை சார்பாக வருகின்ற ஞாயிறன்று (10-07-2022) காலை 7 மணிக்கு அதிராம்பட்டினம் திலகர் தெரு மாஜிதா ஜுவல்லரி எதிர்புறம் உள்ள காலி மைதானத்தில் ஈதுல் அழ்கா உடைய நபி வழி திடல் தொழுகை நடைபெறும் என அவ்வமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இத்திடல் தொழுகையில் பெண்களுக்கு என தனி இடவசதி செய்யப்பட்டு இருப்பதாக NTF அதிரை நகர கிளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.