அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாம் காலிறுதி ஆட்டத்தில் பாலு மெமோரியல் திருச்சி அணியினரும், MFC மதுக்கூர் அணியினரும் மோதினர்.
பாலு மெமோரியல் திருச்சி அணி முதல் கோலை பதிவு செய்ய, MFC மதுக்கூர் அணி அடுத்த நிமிடமே கோல் அடித்து பதிலடி கொடுத்தது. பின்னர் ஆட்டத்தை வேகப்படுத்திய பாலு மெமோரியல் திருச்சி அணியினர் முழு நேர முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் MFC மதுக்கூர் அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
நாளைய(16/07/2022) தினம் விளையாட இருக்கின்ற அணிகள் :
காரைக்கால் கால்பந்து கழகம் காரைக்கால் vs கலைவாணர் 7s கண்டனூர்
ராயல் FC அதிரை – TMMK அதிரை(நட்பு ஆட்டம்)