அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,நாடியம் மற்றும் பேராவூரணி துணை மின்நிலையம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (15.12.2017) மின்தடை அறிவித்துள்ளது.
பேராவூரணி மற்றும் நாடியம் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பராமரிப்பு என்ற பெயரில் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமை முஸ்லீம்களின் முக்கியமான(ஜூம்ஆ) தொழுகை நடைபெறுவதால் அன்றைய நாள் விஷேச நாளாகும்,அப்படியிருக்கையில் மின்சாரம் நிறுத்தம் செய்வது மல்லிப்பட்டிணம், புதுப்பட்டினம்,சம்பைபட்டினம் போன்ற பகுதிகளில் இருக்கும் பொதுமக்களிடையே கொதிப்படைய செய்கிறது.
பலமுறை பொதுமக்கள் கோரிக்கை கொடுத்தும் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மின்சாரம் நிறுத்தம் அறிவிப்பது வேண்டுமென்றே மின்சார வாரியம் செயல்படுத்துகிறதா? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.மேலும் வெள்ளிக்கிழமை தவிர்த்து வேறொரு நாளில் மின்சாரம் நிறுத்தம் செய்யலாம் என்றும் கோரிக்கையும் வைக்கின்றனர்,செவி சாய்ப்பார்களா? நாடியம்,பேராவூரணி துணை மின் நிலைய அதிகாரிகள்..