578
பட்டுக்கோட்டை சரக காவல் துணை கண்காணிப்பாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வந்த டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் அண்மையில் பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை சரக புதிய காவல் துணை கண்காணிப்பாளராக(டிஎஸ்பி) பிரித்விராஜ் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தேனி மாவட்டத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட பிரித்விராஜ் சவுகானுடன் சேர்த்து தஞ்சை மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் மொத்தம் 4 டிஎஸ்பி-க்கள் பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது