Home » இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அதிரை கிளையின் நிர்வாகக்குழு கூட்டம்!

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அதிரை கிளையின் நிர்வாகக்குழு கூட்டம்!

0 comment


இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அதிரை கிளையின் நிர்வாகக்குழு கூட்டம் சேர்மன் ராஜமாணிக்கம் தலைமையில் புதன்கிழமை பிற்பகல்12 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கிளை சேர்மன் திரு இத்ரீஸ் அஹம்து முன்னிலை வகிக்க கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
– பட்டுக்கோட்டை அரசினர் மருத்துவமனையில் இலவச தாய் சேய் ஊர்தி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
– ஆயுட்கால உறுப்பினர் அட்டைகள் வழங்கல் மற்றும் புரவலர்கள் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது
– ஆயுட்கால உறுப்பினர்கள் மன்சூர், அப்சர், நிருபர் கண்ணன் ஆகியோருக்கு ஆயுட்கால அட்டை வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
– இரத்த தான முகாம் நடத்துவது
– அதிரையில் அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துக்கள் மற்றும் இதர விபத்துக்களை தடுக்க, தீ தடுப்பு மையம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தல்
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter