199
டெரிவேர் குழுமத்தின் இல்ல திருமண விழா அதிரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன், பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் ஜவகர் பாபு உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் டெரிவேர் குழுமத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. திருமண நிகழ்வில் பயனுள்ள வகையில் மரக்கன்றுகள் வழங்கி பசுமையின் அவசியத்தை உணர்த்திய டெரிவேர் குழுமத்தின் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.