
கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு & பொதுத்திறன் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசளிப்பு, அதிரைக்கு பெருமை சேர்த்து வருவோருக்கு விருது வழங்குதல், அதிரை எக்ஸ்பிரஸ் 16ம் ஆண்டு துவக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அதிரை புதுமனை தெருவில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறுகிறது. மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் முஹம்மது இப்ராஹிம் தாவூதி தலைமையில் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவில் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் சஃபியுல்லாஹ் அன்வாரி சிறப்புரையாற்றுகிறார். இதில் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அதிரையர்களின் இணையத்துடிப்பான அதிரை எக்ஸ்பிரஸ் அழைக்கிறது.