61
அதிரை நகர வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ரிச்வே கார்டனில் நடைபெற்றது. வர்த்தக சங்க மாவட்ட தலைவர் S.அபுல்ஹசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N.முஹம்மத் புஹாரி MBA, வர்த்தக சங்க மாநில செயலாளர் S.A.M அரபாத், மாநில செயற்குழு உறுப்பினர் குடந்தை இப்றாகீம் சிறப்புரையாற்றினர். பின்னர் அதிரை நகர SDPI வர்த்தக சங்கத்தின் M.I அப்துல்லாஹ் தலைமையிலான புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதன்படி துணைத் தலைவராக N. சிபகத்துல்லாஹ்,
செயலாளராக S. கலீலுர்ரஹ்மான், துணைச்செயலாளராக M.S ஹாஜா அலாவுதீன், அதிரை நகர பொருளாளர் A. அஹ்மத் இபுறாகீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.