இன்று நாடெங்கிலும் 75வது சுதந்திர தின விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தேச விடுதலைக்கு வித்திட்ட அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்ந்து அவர்களின் தியாகத்தை போற்றி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் 2000 மரக்கன்றுகள் நட்டு பசுமை விழாவாக இந்நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
குறிப்பாக மரங்களை நட்டதோடு அல்லாமல் அதனை பராமரிக்க குழு அமைக்கப்பட்டு சீரிய முறையில் வளர்தெடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என ததஜவின் மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது தெரிவித்திருக்கிறார்.