கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணிமன்றம் சார்பில் இன்று அதிரையில் செயல்படும் மீடியாக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆவ்வேண்டுகோள் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடற்கரை தெருவில் ஆர்வமிக்க இளைஞர்கள் கொண்டு ஜமாத்தின் நிர்வாகத்தின் கீழ் இச்சங்கம் 1984 முதல் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது புதிய நிர்வாகம் அமைத்து நல்ல முறையில் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.
இச்சங்கத்தின் நோக்கம்:-கடற்கரை தெரு முன்னேற்றம் மற்றும் அதிரை மக்கள் நலனுக்கு பாடுபடுவது ஆகும்.
ஆகையால், இச்சங்கத்தின் தனிநபர் புகழ்ச்சிக்காகவோ , தவறான உள்நோக்கம் கொண்டோ தனிப்பட்ட பிரிவுகளின் கீழே நடத்தப்படுவதில்லை என்பது குறுப்பிடத்தக்கது.
சங்கத்தின் ஆதங்கம் யாதெனில்,
எங்கள் தெருவிற்கு அரசு சார்பில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. அப்படியிறுக்க செய்யப்பட்டது போல செய்தி வெளியிடப்படுகின்றன.இதனால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால், அதிரையில் இயங்கும் சமூக இணையதளங்கள் மற்றும் மீடியாக்களுக்கு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக செய்தி தொடர்பாளர்களாக மூன்று நபர்களை தேர்வுசெய்யப்பட்டது.
கடற்கரை தெரு சங்க செயல்பாடுகள் சம்மந்தப்பட்ட எந்த செய்திகள் இருந்தாலும் இம்மூன்று நபரின் யாரையாவது தொடர்பு கொண்டு ,செய்திகளை உறுதி செய்த பின்னரே செய்திகளை வெளியிட வேண்டும் என மீடியாக்களை கேட்டுக்கொள்கிறோம்.மேலும் அனுமதி இல்லாமல் இச்சங்கத்தின் பெயரில் ஏதாவது செய்திகள் பிறப்பினால் அதற்க்கு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெருவித்து கொள்கிறோம்.
குறிப்பு:-எங்கள் தெருவின் பிரச்சனைகளை அரசின் செவி வரை கொண்டுசேர்த்த அதிரையின் சில மீடியாக்களுக்கு நன்றிகளை தெருவித்து கொள்கிறோம்.
இங்ஙனம்;-
அப்துல்லாஹ்,
தலைவர்,
தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்,
கடற்கரை தெரு,
அதிராம்பட்டினம்
மூன்று செய்தித்தொடர்பாளர்கள்:-
1).ஜமால் முகம்மது(9080588720)
2).ராவுத்தர் நெய்னா முகம்மது(8870101109)
3).ரிஜ்வான்(7418696498)