139
தப்லீக் ஜமாஅத்தின் தஞ்சை மாவட்ட அளவிலான இஜ்திமா இன்றும் நாளையும் அதிரையில் நடைபெற உள்ளது. தப்லீக் ஜமாஅத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் இஜ்திமாக்கள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இஜ்திமா நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டுக்கான இஜ்திமா இன்றும் நாளையும் அதிரையில் நடைபெறுகிறது.
அதிரை பெரிய ஜுமுஆ பள்ளிவாசலில் இன்று அஸர் முதல் நாளை இஷா வரை நடைபெற உள்ள இந்த இஜ்திமாவில் தலைசிறந்த உலமாக்கள் சொற்பொழிவாற்ற உள்ளனர். மேலும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முஸ்லிம்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் அதிரை பெரிய ஜுமுஆ பள்ளிவாசல் மற்றும் வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.