Home » அதிரை ரயில் பயணம் : பிரபல ஊர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாமிடத்தை பிடித்துள்ளது !

அதிரை ரயில் பயணம் : பிரபல ஊர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாமிடத்தை பிடித்துள்ளது !

by
0 comment

இராமேஸ்வரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது.

பரிச்சாயர்த்த அடிப்படையில் இயக்கப்படும் இந்த ரயிலில் வழிதடத்தில் உள்ள ஊர்கள் வெகுவாக பயன்படுத்தி வருகிறார்கள்.

அறிமுக. செய்யப்பட்ட நாளன்று அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் இந்த ரயிலை வரவேற்று கொண்டடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் இவ்வழித்தடத்தின்,மக்கள் நீண்ட காலமாக காத்திருந்த மக்கள் இந்த ரயிலை வரப்பிரசாதமாக நினைத்து முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதனை நிரூபிக்கும் வகையில் நேற்றய சிறப்பு ரயிலில் பயணம் செய்ய அதிராம்பட்டினம் மக்கள் சுமார் 89 பேர் பயணித்து இருக்கிறார்கள்.

மாயவரம் சந்திப்பு நூற்று கணக்கான பயணிகளை கையாண்டு முதலிடத்தல் இருக்கிறது. அடுத்தப்படியாக அதிராம்பட்டினம் ரயில் நிலையம் உள்ளது.

நமதூர் மக்கள் இந்த ரயிலை முழுமையாக பயன்படுத்தி அதிக வருவாயை தென்னக ரயில்வே ஈட்டும் பட்சத்தில் இன்னும் கூடுதல் ரயில்களை இயக்க ஏதுவாக அமையும் என்கின்றனர் ரயில் பயனாளர்கள் சங்க பிரதிநிதி தெரிவிக்கிறார்.

இந்த சிறப்பு ரயிலில் சில இடர்பாடுகள் இருக்கத்தான் செய்யும் காரணம் வழமையாக செல்லும் ரயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரத்திற்கு ஏற்றவாறு கிராஸ்சிங் செய்த பின்னர் சிறப்பு ரயில்களுக்கு வழிவிடுவது வழக்கம் அந்த வகையில் இந்த ரயிலுக்கும் சில நேர பின்னடைவு இருக்கத்தான் செய்யும்.

இதனை போக போகத்தான் சரி செய்ய இயலும் என அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter