294
அதிரையின் மருத்துவ தலைமையிடமாக திகழும் ஷிஃபா மருத்துவமனை தனது அடுத்தக்கட்ட பரிமாண வளர்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன்படி ஷிஃபா பெயரில் துணை மருத்துவ கல்லூரியை இந்திய மருத்துவ கழகத்தின் அங்கீகாரத்துடன் நடப்பு கல்வி ஆண்டு முதல் ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் ஆரம்பித்து டிப்ளமோ ஹெல்த் அஸிஸ்டண்ட், டிப்ளமோ டயாலிஸிஸ் டெக்னாலஜி, டிப்ளமோ ஆப்பரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, டிப்ளமோ ரேடியேஷன் & இமேஜிங் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளுக்கு அட்மின்சனை துவக்கியுள்ளது. இவை 2 ஆண்டு பாடத்திட்டமாகும்.
10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பாட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து ஷிஃபா துணை மருத்துவ கல்லூரியில் தங்களது பயிற்சியை துவங்கலாம்.