அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் CBD அமைப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் அவசர தேவைக்கு இரத்ததானம், அவசர மருத்துவ உதவி, பேரிடர் மீட்பு குழு போன்ற பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்துவருகிறது. CBD அமைப்பின் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று(15/12/2017) பகல் சுமார் 12மணியளவில் அதிராம்பட்டினம் மேலத்தெரு ஜும்மா பள்ளிவாசல் அருகாமையில் அதிரை நகர் கிரசண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) அமைப்பு சார்பில் இரத்த தான கொடையாளர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்களின் பெயர், இரத்த வகை, தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்களை ஆர்வத்துடன் அளித்து CBDல் கொடையாளர்களாக இணைத்துக் கொண்டனர்.
இம்முகாமிற்கு CBDயின் மாவட்ட துணை தலைவர் அக்லன் கலீஃபா(அதிரை கலீஃபா) அவர்கள் தலைமை தாங்கினார்.
இக்கொடையாளர் சேர்க்கை முகாமிற்கு CBDயின் அதிரை நகர தலைவர் இப்ராஹிம் அலி அவர்கள் முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் CBDயின் செயற்குழு உறுப்பினர்களான சமீர் அலி, அப்ரித் , ஃபாய்ஸ் அஹ்மது மற்றும் CBDயின் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.