அதிரை அடுத்த மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், முத்துப்பேட்டை, அம்மாப்பட்டினம், போன்ற ஊர்களில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிரையில் தொழில் செய்து வருகின்றனர்.
மருத்துவம் மற்றும் பள்ளிக் கல்லூரி சார்ந்த தேவைகளுக்கும் அதிரைக்கு வெளியூர் மக்கள் போக்குவரத்தாக இருந்து வருகின்றனர்.
அதிரையிலிருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வர்த்தகம் முடிந்து வீடு திரும்புவதற்கு பெரும்பாலான மக்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், அதிரையில் உள்ள தனியார் பேருந்து ஒன்று அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுவதால் பெரும்பாலான பெண்கள், கல்லூரி மாணவிகள் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். படிக்கட்டுகளில் பெண்கள் பயணம் செய்வதால் சில விரும்பத்தகாத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக சக பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தனியார் பேருந்துகளின் நடத்துனர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்தி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றாமல் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.