
அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை செவி திறன் குறைப்பாடு இருக்க கூடிய குழந்தைகளும் பெற்றோர்களும் எதிர்க்கொள்ள சிறியளவிலான பயிற்சிகள் தேவைப்படுகிறது. அத்தகைய பயிற்சிகளை அளிக்க மாவட்ட அளவில் ஓரிரு மையங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் அதிரையில் இருக்க கூடிய காது கேளாத குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு குடந்தை சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பேச்சு பயிற்சி மையத்தை (ECI) சி.எம்.பி லைனில் ஏ.எல் பள்ளி நிர்வாகம் ஆரம்பித்துள்ளது. குடந்தை சேவா சங்கத்தின் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடனும் இந்த சிறப்பு பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.
ஏ.எல் பள்ளி இயக்குனர் இம்தியாஸ் முன்னிலையில் நடைபெற்ற திறப்பு விழாவில் மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் பங்கேற்று காது கேளாத இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பேச்சு பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார். இதில் குடந்தை சேவா சங்க இயக்குனர் சதீஸ் குமார், நெற்கதிர் மாற்றுதிறனாளி முன்னேற்ற நலச்சங்க மாவட்ட தலைவர் பஹாத் முகமது, பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் ஜம்ஜம் அஷ்ரப் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். வாரம் இருமுறை நடைபெறும் இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பெற்றோர், ஆசிரியை ஜெய மாலாவை +91 9566169838 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்புக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.