Home » PFI மீதான NIA ரெய்டு – அதிரையில் போராட்டத்தை அறிவித்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு!

PFI மீதான NIA ரெய்டு – அதிரையில் போராட்டத்தை அறிவித்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு!

0 comment

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுலகங்களில் NIA சோதனை நடத்தி, அவ்வமைப்பின் நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து அதிரையில் வரும் 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிரை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

PFI அலுவலகங்களில் NIA சோதனை நடத்தியது குறித்த ஆலோசனை கூட்டம் அதிரையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து இஸ்லாமிய இயக்கத்தினர் பங்கேற்றனர். அதன்பிறகு கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

இந்தியா முழுவதும் கிளை பரப்பி மக்களுக்கான சேவைகளை செய்துவரும் தேசிய மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய பாஜக அரசு தனது அதிகார துஷ்பிரயோகம் மூலம் NIA, ED, CBI உள்ளிட்ட நிறுவனங்களைக் கொண்டு சோதனைகள் என்ற பெயரிலும், பொய் வழக்குகளை புனைந்தும் தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக 22/09/2022 அன்று நள்ளிரவு முதல் 13 மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) அத்துமீறல் நடைபெற்றுள்ளது. பாப்புலர் ஃப்ரண்டின் நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்களை கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய எதேச்சதிராக நடவடிக்கைகளை அதிராம்பட்டினம் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
ஒன்றிய பாஜக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தும் மக்கள் அமைப்புகளின் செயல்பாடுகளை தடுக்கும் விதமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். அடிப்படை ஆதாரமற்ற சோதனைகளை காரணம் காட்டி கைது செய்யப்பட்ட அனைத்து பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அதிராம்பட்டினம் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள் : 28/07/2022 புதன்கிழமை மாலை 4 மணி
இடம் : தக்வா பள்ளி பேரணி துவக்கம்,
ஆர்ப்பாட்டம் பேருந்து நிலையம்

இப்படிக்கு,
அதிராம்பட்டினம் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter