தமிழகத்தில் உள்ள பழமையான பேரூராட்சிகளில் அதிரையும் ஒன்று. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகரின் எல்லையும் விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. ஆனால் அதற்கு ஏற்றார்போல் கூடுதல் அதிகாரிகளும் ஊழியர்களும் அதிரை பேரூராட்சிக்கு நியமிக்கப்படுகிறார்களா என்றால் காலமே பதில் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தான் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அதிரைக்கு மாறுதலாகி வந்திருக்கிறார் கே.அன்பரசன் என்ற இளம் துப்புரவு ஆய்வாளர்.
அதிரை பேரூராட்சியில் பொறுப்பேற்று மூன்று மாதங்களான நிலையில் பொதுமக்கள் சொல்லும் புகார்களுக்கு தன் அதிகாரத்திற்குட்பட்டு விரைவான நடவடிக்கைகள் எடுத்து அவர் அன்புக்கு அரசனாக திகழ்வதாக கூறுகின்றனர் பயனடைந்தவர்கள்.
மேலும் இதுபோன்ற அதிகாரிக்கு ஊர்வாசிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், கே.அன்பரசன் அவர்கள் இனிவரக்கூடிய நாட்களிலும் பொதுமக்களின் கோரிக்கைகளை உற்சாகம் குறையாமல் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்